க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை -2018 இன் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 4 பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) முதல் 17 ஆம் திகதி வரையில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கொழும்பு இசிபதன வித்தியாலயம், மாத்தறை மஹாநாம மகா வித்தியாலயம், குருணாகலை சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர வித்தியாலயம், கண்டி புனித அந்தோணி பாலிகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.
அத்துடன், மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 22 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டுக் காணப்படும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
Post a Comment