
சபரிமலையின் பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் கூறும்போது, அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க நியமிக்கபட்டிருக்கிறார்கள். அத்துடன் போக்குவரத்தை சீர்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது, திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் அந்த அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறிய அவர் வனப்பகுதி வழியாக நடந்து வரும் பக்தர்களை, பயங்கரவாத அமைப்புகள் தாக்காத வகையில் அங்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரையில் நிலக்கல்லுக்கு 7,500 வாகனங்கள் வந்துள்ளன. அத்துடன் 19,000 கார்கள் வந்துள்ளன. இதற்கிடையே கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அந்தப் பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளதால், இந்த முறை நிலக்கல்லில் பார்க்கிங் இடம் நிரம்பியதும், மீதமுள்ள வாகனங்கள் வேறு இடங்களில் நிறுத்தப்படும். மேலும் பேருந்துகள் மூலம் வரும் பக்தர்களுக்காக நிலக்கல் டூ பம்பா தொடர் பேருந்து இயக்கப்படும் என்றார்.
Post a Comment