Ads (728x90)

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.

தென்ஆப்பிரிக்க அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரதான சுழற்பந்து வீச்சாளர் கே‌ஷவ் மகராஜ் நீக்கப்பட்டு, பிலாண்டர் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ், பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தேனீர் இடைவேளைக்கு முன்பாக 51.1 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது. முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை தாண்டாத பாகிஸ்தான், இந்த டெஸ்டிலும் பேட்டிங்கில் விழிபிதுங்கி போனது. அதிகபட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 56 ரன்களும், ஷான் மசூட் 44 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் டுன்னே ஆலிவர் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டும், பிலாண்டர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்துள்ளது. டீன் எல்கர் 20 ரன்னிலும், மார்க்ராம் 78 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget