
பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் நேற்று வெளியாகின. தற்போது எல்லாம் புதுப்படங்கள் வெளியான வேகத்தில் அது தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடுகிறது
பேட்ட படம் வெளியான 12 மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிட்டது. அதுவும் ஹெச்.டி. தரம் கொண்ட ப்ரிண்டில் வெளியாகியுள்ளது. அதை பலரும் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தை பேட்ட போன்றே ஹெச்.டி. ப்ரிண்ட்டில் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். அஜித், ரஜினி என்று யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் இப்படி படங்களை லீக் செய்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் கூட எடுத்துவிடலாம் ஆனால் அங்கு விற்கும் திண்பண்டங்கள், தண்ணீர், டீ, காபி வாங்கத் தான் அதிகம் செலவாகிறது என்று கூறி தமிழ் ராக்கர்ஸில் படத்தை டவுன்லோடு செய்து பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவை தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளதால் படத்தின் வசூல் பாதிக்கக்கூடும். ஒவ்வொரு படம் ரிலீஸாகும் முன்பு அதை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்குகிறார்கள். தடையையும் தாண்டி படம் லீக்காகிக் கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment