
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. கதையை தேர்வு செய்து நடித்து அதனை ஹிட் கொடுப்பதில் கில்லாடி. அண்மையில், சூப்பர்ஸ்டார் ர ஜினிக்கு வில்லனாக நடித்த பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன், இடம் பொருள் ஏவல், மார்கோனி மதாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகயிருக்கிறது.
இந்த நிலையில், பேராண்மை, புறம் போக்கு ஆகிய படங்களில் இயக்குனர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்காக 150 வருடம் பழமை வாய்ந்த பிரமாண்ட சர்ச் செட் உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், காதல், இசை என்று பல கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சனையைப் பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
Post a Comment