Ads (728x90)


15.01.2015 முதல் 31.12.2018 வரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, ஓய்வு பெற்ற கணக்காளர் நாயகம் கே.ஏ.பிரேம திலக்க, ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளர் லலித் ஆர்டி சில்வா மற்றும் ஓய்வு பெற்ற பிரதி காவல்துறைமா அதிபர் விஜய அமரதுங்கவும் அதன் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget