Ads (728x90)

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது.

 இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா, என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் .

தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்த படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், தனது படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கூறி அதற்கான பெயர்களை தேர்வு செய்யுமாறு பதிவிட்டிருந்தார்.

அதில் மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை அவரவர் விருப்பப்படி கூறிவந்தனர். இந்த நிலையில் இன்று இரவு 12.10 மணிக்கு படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தின் அப்டேட் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ‘சூர்யா 37’ படத்தின் அப்டேட் கிடைத்திருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget