Ads (728x90)

இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்று வருகின்றது.இதில் 83 வாக்குகளை பெற்று ஷம்மி சில்வா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் போட்டியிட்ட ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஷம்மி சில்வா திலங்க சுமதிபால பக்கம் சார்பாக போட்டியிட்டிருந்ததுடன் ஜயந்த தர்மதாஸ அர்ஜுன ரணதுங்க பக்கம் சார்பில் போட்டியிட்டிருந்தார்.

இதேவேளை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷம்மி சில்வா இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் பொருளாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget