நாட்டினுள் மக்களின் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இடையூராக, முகத்தை முடி உடையணிய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால உத்தரவின் கீழ், இந்த நடவடிக்கை ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment