Ads (728x90)

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விஷேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிவசத்தின் ஆலோசனையின் அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் இதனை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைவாக பாடசாலை சமூகத்தினரை தெளிவுப்படுத்துதல் பாதுகாப்பு குழுக்களை அமைத்தல் மற்றும் பாதுகாப்புக்காக கடைப்பிடிக்கவேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலான விடயங்கள் இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாடசாலை சமூகத்தினரை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் மாணவர் மற்றும் பணியாளர் சபையினரின் பாதுகாப்பு அனர்த்த நிலை தொடர்பான அடையாளம் காண மற்றும் தவிர்த்து கொள்வதற்காக அனைத்து பணியாளர் சபை மாணவர்கள் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் உள்ளடங்களாக பாடசாலை சமூகத்தினரை தெளிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அதிபர்கள் உள்ளடங்கிய சபை பெற்றோர் பழைய மாணவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் துணைக்குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட 18 விடயங்கள் இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget