Ads (728x90)

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 135 ரூபாவாகும். ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய. ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 164 ரூபாவாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 136 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 104 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை இந்திய எரிபொருள் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,  ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 135 ரூபாவாகும்.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய. ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 167 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 136 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, 113 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget