ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 150 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment