Ads (728x90)

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி 10 விக்கெற்றுகளால் வெற்றி பெற்றது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் 3 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதல் தடுமாறிய இலங்கை அணி, 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தலைவருமான டிமுத் கருணரத்ன 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல், குசல் பெரேரா 29 ஓட்டங்களும் திசார பெரேரா 27 ஓட்டங்களை பெற்ற அதேவேளை, ஏனைய வீரர்கள் அனைவரும் 7 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களை எடுத்திருந்ததுடன், குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், இசுறு உடன ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் விழ்த்தினர். இதையடுத்து 137ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அடிப்படையில் நியூஸிலாந்து அணி 16.1 ஓவரில் 137 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. மார்ட்டின் குப்டில் 51 பந்துகளில் ஓட்டங்களும் 73 கொலின் முன்றோ 47 பந்துகளில் 58 ஓட்டங்களும் பெற்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget