கல்முனை வடக்கு பிரதேச உபசெயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்க வைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று நடத்திய உயர்மட்ட சந்திப்புக்களை அடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மாதத்திற்குள் அனைத்து நிர்வாக, சட்டரீதியான பணிகள் முடிவு செய்யப்பட்டு, கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் இயங்க ஆரம்பிக்கும்.
நேற்று பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர், முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, ஆகியோர் மூடிய அறைக்குள் நடத்திய மந்திராலோசனையின் பின்னர் உடனடியாக கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதென முடிவாகியது. இதற்கான முதற்கட்ட அறிவிப்பை இன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிடவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment