பிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள அம்சங்களை தழுவிய புதிய அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை ரிவர்ஸ்-என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருக்கும் க்ரிட்-ஸ்டைல் லே-அவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த செயலியில் புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை அவர் வழங்கவில்லை.
Post a Comment