Ads (728x90)

அரச காணிகளில் அனுமதிப் பத்திரங்களுடன் வசிக்கும் மக்களுக்கு காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என இது தொடர்பான சட்ட மூலம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கும்போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

இச்சட்டமூலம் முழு நாட்டிற்கும் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.1920 களிலிருந்து அரச காணிகளில் வசிப்பவர்கள் காணி உரிமை பத்திரமின்றி அனுமதி பத்திரங்களையே வைத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் மக்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேற்படி காணிகளைத் தமது பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறானவர்களுக்கு அக்காணிகளுக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாகும்.

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்பவர்கள், அக்காணிகளை அபிவிருத்தி செய்வதற்கான கடன்களையும் வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget