இலங்கை அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு எந்த உரிமையும் இல்லை என தங்காலையில் உள்ள தனது வீட்டில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒழுக்கத்தை பாதுகாக்க முடிந்த தலைவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் நாடும், இனமும் அழிந்து போகும். கடந்த தேர்தலில் என்னை தோற்கடிக்க வெளிநாடுகள் பணியாற்றின. இம்முறையும் வெளிநாடுகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடும்.
கடந்த தேர்தலை விட வெளிநாடுகளின் தலையீடு குறைவாக இருக்கும் என நினைக்கின்றேன். எமது நாட்டின் அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமையில்லை. இப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அந்நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment