Ads (728x90)

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி துணிச்சலான நடித்துள்ளதற்கு பாராட்டும் விமர்சனங்களும்  கிடைத்து வருகிறது. இந்தப்படம் தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

இதனிடையே இந்தப்படம் சமுதாயத்தை சீரழிப்பதாகவும் அதனால் இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ‘பாலியல் குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் வேளையில் ஆடை போன்ற படங்களைத் தடை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget