Ads (728x90)

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198,229 பரீட்சகர்களும், பழைய பாடத்திட்ட சிபாரிசின் கீழ் 139,475 பரீட்சகளும் தோற்றவுள்ளனர்.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 339,369 என்பதுடன், 2,995 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புகளை, இம்மாத இறுதியிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget