வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும்.
பாதுகாப்புச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சோதனையின் பின்னரே ஆலயத்திற்குளு் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment