ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும்வரை இலங்கையுடனான சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்தி வைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அண்மையில் ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலில் அமெரிக்கா- இலங்கைக்கு இடையிலான சோபா உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபடாது என அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதென்றும் அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதோடு இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்கான இலங்கையின் உரிமையை தாங்கள் மதிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment