ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்கள் எனின் அதற்கு முன்கூட்டியே நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள். அடுத்த கட்ட நடவடிக்கைகளை தேர்தலின் பின்னர் முன்னெடுப்போம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குங்கள்.
அதனைக்கூடச் செய்ய முடியாது என்றால் அவர்களுடைய கொள்கை உண்மையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதாக இருக்கின்றதா? என்ற சந்தேகமே எழுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment