இந்நிலையில் உலகில் உள்ள இணையதளத்தில் முதன்மையான இணையதளமான கூகுள் இன்று தனது 21 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பொரின் ஆகிய இருவரும் இணைந்து ஒரு தேடு பொறியை உருவாக்கி அதற்கு கூகுள் (google ) என்று பெயர் வைத்தனர். பின்னர் இந்த பெயரை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இல் கூகுள் டொமைனாக பதிவு செய்தனர். 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் கூகுளை நிறுவனமாக பதிவு செய்தனர்.
கூகுளை நிறுவனமாக பதிவு செய்த நாளை வருடம் தோறும் கூகுளின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறது.
இந்த நிறுவனம் சர்வதேச அளவில் 4.5 பில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுக்க 123 மொழிகளில் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment