Ads (728x90)

அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2020 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவர்களின் 2015 ஆம் ஆண்டு ஆரம்ப சம்பளம் முதல் 2020 வரை பெற்றுவந்த 107வீதமான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாகவே இந்த அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

இதன்படி அரசாங்க ஊழியர்களின் 2015 ஆம் ஆண்டுக்கான சம்பளத்தின் 50 சதவீதம் 2020 ஜனவரியிலும் எஞ்சிய தொகை 2021 ஜனவரியிலும் வழங்கப்படும்.

இப்புதிய சம்பள அதிகரிப்புக்கமைய நிறைவேற்று அதிகாரி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 9 ஆயிரத்து 587 ரூபாயாலும், அமைச்சு செயலாளர் ஒருவருடைய சம்பளம் 23 ஆயிரத்து 975 ரூபாயாலும் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று அரசாங்க சேவையில் குறைந்த மட்டத்திலுள்ள அதிகாரிகளின் சம்பளம் 3 ஆயிரம் ரூபாயாலும், உதவி முகாமையாளர்களின் சம்பளம் 4 ஆயிரத்து 320 ரூபாயாலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரது சம்பளம் 5 ஆயிரத்து 40 ரூபாயாலும் அதிகரிக்கப்படும்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எஸ்.ரணுக்கே தலைமையிலான அரசாங்க சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான குழுவின் சிபாரிசுக்கமைய அமைச்சரவையில் மேற்படி சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget