Ads (728x90)

 சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீராக்குவதற்கு லிட்ரோ காஸ் லங்கா வினைத்திறனுடன் செயலாற்றிவருவதாகவும்,  அவசியமான  எரிவாயு சிலின்டர்களை சந்தையில் தடங்கலின்றி விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனைக் கூறியுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் சவூதி அரேபியாவின் அரெம்கோ ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சந்தையில் எரிவாயுவுக்கு குறிப்பிடத்தக்களவு தட்டுப்பாடு நிலவுகின்றது.  தற்போதைய எரிவாயு பற்றாக்குறைக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.

எரிவாயு விலை தொடர்பில் சூத்திரம் தயாரிக்கப்பட்ட நிலையில்,விலை குறைவு ஒன்றை எதிர்பார்த்து,செப்டம்பர் மாதத்தில் எரிவாயு கேள்வியில் வீழ்ச்சி காணப்பட்டது.

அடுத்து, செப்டம்பர் மாத நடுப் பகுதியில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் அரெம்கோ ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு சவூதி அரேபியாவின் பகுதிகளைச் சேர்ந்த எரிவாயு விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் இலங்கை அடங்கலாக தாமதம் ஏற்பட்டது.

மேலும், எரிவாயு சிலின்டரின் விலைக்குறைப்பு காரணமாக புதிதாக சந்தையில் பிரவேசித்த நுகர்வோரின் எண்ணிக்கையும் காரணமாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளில் பதிவாகியிருந்த மிகவும் குறைந்த விலையாக தற்போதைய விலை காணப்படுகின்றது. 2016 இல், 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 1,321 ரூபாயாக காணப்பட்டது. நாட்டின் எரிவாயு துறைக்கு தற்போதைய தட்டுப்பாட்டு நிலை வெவ்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் தொடர்ந்து நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கப்பல்கள் எரிவாயு விநியோக இறங்குதுறைகளை நெருங்குவதில் காணப்படும் சிக்கல் நிலையும், இந்த நிலைமையை மேலும் பாதித்துள்ளது. கப்பல்கள் காத்திருக்கும் நிலையில்,அவற்றை இறங்குதுறையில் இறக்குவதில் சிக்கல் நிலைகளும் காணப்படுகின்றன.

இந்த காரணங்களினாலேயே தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பொது மக்கள் அச்சமடைந்து, கொள்வனவு செய்ய முனைவதும், 900 – 950 மெட்ரிக் தொன்களாக காணப்பட்ட பாவனை, 1300 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளது. முழு விநியோகத் தொடரிலும் இது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget