Ads (728x90)

 ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள விசேட பாதுகாப்புடன் கூடிய காகித அட்டைகளினால் ஆன வாக்குப்பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தலுக்காக 12 ஆயிரத்திற்கும் அதிகமான காகித அட்டை வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதிகளவான வேட்பாளர்கள் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளின் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இவ்வகையான வாக்குப்பெட்டிகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

அதேநேரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்படவுள்ளன.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget