Ads (728x90)

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் தாமே பிரதமராக பதவி வகிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானால், அவர் யாரை பிரதமராக நியமிப்பார் என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக சஜித் பிரேமதாச இதுவரையில் உறுதியான பதில் எதனையும் வழங்கவில்லை.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய ரணில், சஜித் ஜனாதிபதியானதும், தாமே தொடர்ந்து பிரதமராக பதவி வகிக்கவிருப்பதாக தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget