சர்வதேச மீனவர்கள் தினமான நேற்று சுமார் 2,000 கிலோ எடைகொண்ட சுறா மீனொன்று யாழ்.நயினாதீவு கடற்பகுதியில் வலையில் சிக்கியுள்ளது. கரைக்கு இழுத்துவரப்பட்ட மீனை மீண்டும் கடலுக்குள் மீனவர்கள் விடுவித்துள்ளனர்.
நயினாதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இந்த சுறா மீன் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மீன்டிபியில் ஈடுபட்டிருந்த வேளை வழமைக்கு மாறாக அதிக எடை கொண்ட மீன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் சக மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஏனைய சில மீனவர்கள் அங்கு வந்த போதும், வலையில் சிக்கிய மீனை படகில் ஏற்ற முடியாததால் மீனை கரைக்கு இழுத்து வந்தனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீன் கரைக்கு இழுத்துவரப்பட்ட போது, Whale Sharks என்று அழைக்கப்படும் சுறா என தெரியவந்துள்ளது. அருகிவரும் மிகவும் பெறுமதி வாய்ந்த உயிரினம் என்பதாலும், இதனை உணவுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் மீண்டும் அதை கடலிலேயே விட்டுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment