Ads (728x90)

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் 26, 27ம் திகதிகளில் எந்தவொரு நிகழ்வும் நடத்தக் கூடாதெனவும், மாணவர்கள் உள்நுழைய கூடாதெனவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பல்கலைகழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் ச.கந்தசாமி அறிவித்துள்ளார்.

பல்கலைகழக வளாகத்திற்குள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமென சகல மாணவர்களிற்கும் அறிவிக்கும்படியும், சுமுகமான நிலைமையை ஏற்படுத்த ஒத்துழைக்கும்படியும் அவர் எழுத்துமூலம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார்.

வருடம்தோறும் கார்த்திகை 27 அன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர் நாள் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூரப்படுவது வழமை. இந்நிலையில் இம்முறை கார்த்திகை 27 ஆம் திகதியான இன்று மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget