யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை மற்றும் திருச்சிக்கு வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 - 50 நிமிடங்களுக்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரயாணிகள் தங்கள் விமான டிக்கெட்டுகளை டிக்கெட் முன்பதிவு முகவர் மூலமும், விமான சேவை வலைத்தளங்களிலிருந்தும் முன்பதிவு செய்யலாம். இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்திலுள்ள தூதரக பொது அலுவலகத்திலிருந்தும் இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய விமான சேவை நிறுவனம் ஒன்றினால் யாழ்ப்பாணத்திற்கும் சென்னை மற்றும் திருச்சிக்கும் இடையில் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம் சி. நிமல்சிறி குறிப்பிட்டார்.
மேலும் வாரத்திற்கு மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு விமான சேவையை முன்னெடுப்பதற்கு இலங்கையிலுள்ள விமான நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment