ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ விட்டுக்கொடுப்பதற்குத் தான் தயாரில்லை என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்றும், புதிய தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் என்றும் சஜித் ஆதரவு அணி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு விசுவாசமான எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்திய ரணில் விக்கிரமசிங்க, எக்காரணம் கொண்டும் தான் கட்சியின் தலைவர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ விட்டுக் கொடுக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பம் நிலவி வருகின்றது. சஜித் ஆதரவு அணி உறுப்பினர்கள் மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்றும், அதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை சஜித் பிரேமதாஸவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என தெரிவித்து, ஐ.தே.க. உறுப்பினர்கள் 47 பேர் கையொப்பமிட்ட கடிதமொன்றை சபாநாயகருக்கு கையளித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment