ஜனாதிபதி தேர்தல் குறித்த அவதான கருத்து கணிப்பில் சஜித் பிரேமதாச முன்னணியில் இருப்பதாக ஜனாதிபதி புலனாய்வுதுறை தமது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்த அவதான கருத்து கணிப்பை ஜனாதிபதி புலனாய்வு துறையினர் ஜனாதிபதியிடம் நேற்று கையளித்துள்ளனர்.
அந்த அறிக்கையின்படி கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்லின் போது அன்னம் சின்னத்துக்கு கிடைத்த வாக்குகளில் 6 லட்சம் வாக்குகள் ஜே.வீ.பியின் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கிடைக்கலாம். அதேபோல முன்னால் இராணுவ தளபதியான மகேஸ் சேனாநாயக்கவுக்கு 1 லட்சம் வரை கிடைக்கலாம்.
அதேபோல ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொஞ்ச வாக்குகள் ஜே.வீ.பியின் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிகா ஆதரவு தரப்பினதும், மைத்திரியின் ஆதரவு தரப்பினரதும் வாக்குகள் சஜித்துக்கே கிடைக்கும் நிலை உள்ளது. இதனடிப்படையில் கோட்டாபய தரப்பு எதிர்பார்த்த அளவு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை.
கடந்த 11ம் திகதி கிடைத்த புலனாய்வு கணிப்புகளின் போது சஜித்துக்கு 11 மாவட்டங்களில் முன்னணி நிலை இருந்து வந்தது. ஆனால் நேற்றைய நிலை அது 13 மாவட்டங்களாக உயர்ந்துள்ளன. சஜித் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறக் கூடிய மாவட்டங்களில் பொலன்னறுவையும் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கண்டி, மாத்தளை, நுவரெலியா, யாழ்பாணம் , வவுனியா , வன்னி , கொழும்பு , திகாமடுல்ல , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாலான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment