Ads (728x90)

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தீர்மானங்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன இன்று வெளியிட்டுள்ளார்.

அத்தீர்மானங்களாவன,

01) மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியைத் தடை செய்தல்.

02) 15% சதவீதமாகக் காணப்பட்ட VAT வரியை 8% சதவீதமாகக் குறைத்தல்.

03) தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியை 25 சதவீதத்தால் குறைத்தல்.

04) அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல்.

05) அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக அரச இலட்சினையைக் காட்சிப்படுத்தல்.

06) இடைக்கால அரசின் அமைச்சரவையை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசின் அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தல்.

07) சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம்.

08) 9 மாகாணங்களினதும் பாதுகாப்புத் தொடர்பான விசேட பொறுப்பை இராணுவத்தினர் ஏற்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை.

09) பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல்.

10) இந்தியா, சீனா  நாடுகள் எமது நாட்டுக்கு எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.

11) ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ இல்லமாகத் தனது தனிப்பட்ட வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தல்.

12) கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல்.

Post a Comment

Recent News

Recent Posts Widget