முஸ்லிம் தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்பும், பூரண அதிகாரமும் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தாமரை தடாக கலையரங்கில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பினை முழுமையாக இல்லாதொழித்த இராணுவத்தினருக்கு ஆயுதமேந்திய தலைவராக செயற்பட்டமையினை இட்டு சர்வதேச மட்டத்தில் பெருமையடைந்துள்ளேன். 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஸ். பி. ஐ நிறுவனம் விடுதலை புலிகள் அமைப்பு பலம் வாய்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
அவர்கள் அந்த அமைப்பை சர்வதேச பலம் வாய்ந்த அமைப்பாக கருதினர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட்டு 30 வருட கால யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment