Ads (728x90)

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

17 கட்சிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget