ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மூன்றில் இரண்டு பலமுள்ள அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதியதொரு அரசாங்கம் உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் உருவாகுவதற்கு நாம் கடந்த காலங்களில் பல்வேறு தியாகங்களை மேற்கொண்டிருந்தோம். மேலும் நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்க வேண்டும் என்றும் புதியதொரு அரசாங்கம் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்றும் நாம் உறுதியாக இருந்தோம்.
இந்நிலையில் அடுத்த ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன பலமான கூட்டணியாக இந்தத் தேர்தலில் களமிறங்கும். இதனூடாக ஜனாதிபதிக்கு மேலும் பலத்தை வழங்கும் வகையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment