Ads (728x90)

யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள்  அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகில் மிகச்சிறந்த தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் தற்கொலை தாக்குதல் படகுகளை உருவாக்கியவா் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தன்னிடமிருந்த சிறிய ரக விமானங்கள் மூலம் மிக துல்லியமான தாக்குதல்களை நடாத்தி உலகை வியக்கவைத்தவா். இவ்வாறு பிரதமா் மஹிந்த ராஜபக்ச திருகோணமலை-சீனன்குடா விமான படைத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது  கூறியுள்ளார்.

உலகில் உள்ள எந்த பயங்கரவாதிகளிடமும் விமானப்படை இருந்ததில்லை. இதில் விடுதலைப்புலிகள் அனுபவசாலிகள் சிறிய விமானங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முனைந்தவர்கள்.
கொலன்னாவ பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றில் பெரும் சேதங்களை ஏற்படுத்த முனைந்தனர். ஆனால் எமது விமானப்படையினர் அதனை முறியடித்தனர்.

இதனாலேயே உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் உளவுப் பிரிவான எப்.பி.ஜ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்து அவ்வியக்கத்தைத் தடைசெய்தது. அதன் அடிப்படையில் அவர்கள் அழிவினை தேடிக்கொண்டனர். இவ்வாறான பலம் கொண்ட அமைப்பினை இல்லாதொழித்தமை  இலங்கையின்  முப்படையின்   கௌரவத்தை உலகிற்கே  இன்று  பறைசாற்றியுள்ளது.

30 வருட கால யுத்த பின்னணியை கொண்ட விடுதலை புலிகளுக்கு எதிராக 1980 இலேயே வான்வெளி தாக்குதலை விமான படை மேற்கொண்டது. இக்காலக்கட்டத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் வரையில் இராணுவத்திற்கு  விமானப் படை  பாரிய  ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது.

தாய் நாட்டிற்காக உயிர் நீத்த முப்படையினரும் அரசியலுக்கு அப்பாற் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் முப்படையினர் ஆற்றிய சேவையினை இன்றும் தொடர்கின்றார்கள்.  இயற்கை அனர்த்தத்தின் போது தங்களின் உயிரை தியாகம் செய்தும் பொது மக்களை  முப்படையினர் பாதுகாத்துள்ளார்கள். விமான படையின்  சேவை  அளப்பரியது என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget