அமைச்சர் விமல் வீரவன்சவினால் அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட மன்னார் செல்வாரி பனந்தும்பு உற்பத்தி நிலைய பெயர்ப்பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அங்குள்ள பெயர்ப்பலகை மீளமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் செல்வாரி பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 18 ஆம் திகதி திறந்து வைத்தார். அவர் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தபோது, அதில் முறையே தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மன்னார் செல்வாரி பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் சிங்கள மொழி முதலாவதாவும், தமிழ் மொழி இரண்டாவதாகவும், ஆங்கில மொழி மூன்றாவதாகவும் அமைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment