ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் பயிற்சியளாருக்கான நியமன கடிதத்தை வழங்குதல்.
இந்த பயிற்சியாளர்கள் பயிற்சி கால வரையறுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்குள் இணைக்கப்பட்டு பயிற்சியை வழங்குதல்.
ஒரு வருடம் திருப்தியான பயிற்சி காலத்தின் இறுதியில் இவர்கள் பணியாற்ற விருப்பத்தை தெரிவித்துள்ள கிராமிய பிரதேசத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரச சேவைக்கு உட்பட்ட நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளுதல்.

Post a Comment