கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் இம்முறை வாக்களிப்பதற்கு 17,85,964 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இம்முறை குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் அமைந்துள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2,87,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு தேர்தல் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில், காலி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 9 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 8 இலிருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment