Ads (728x90)

2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளங்களினூடாக பொறுப்பற்ற விதத்தில் போலி தகவல்களை பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget