Ads (728x90)

கொரொனா வைரஸின் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டில் நேற்று 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 738 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஸ்பெயினும் சீனாவை முந்தியுள்ளது.

ஸ்பெயினில் நேற்று மாத்திரம் 738பேர் பலியான நிலையில் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3434 ஆக உயர்ந்துள்ளது. 27 ஆயிரம் பேர் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று மாத்திரம் இத்தாலியில் 683 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6820 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget