இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தவிர யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளர் நேற்று பதிவானார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து வருகை தந்து, அரியாலையில் ஆராதனை நிகழ்வில் ஈடுபட்ட மத போதகரை சந்தித்த ஒருவருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.
குறித்த மத போதகரும் கொரோனா தொற்று காரணமாக சுவிட்சர்லாந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 3,400 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவிலுள்ள விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இன்று சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம், கொடிகாமம் 522 ஆவது படைப்பிரிவு முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை கிளிநொச்சி – இரணைமடு விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தியாவிற்கு யாத்திரிகர்களாக சென்று நாடு திரும்பியவர்களில் ஒரு தொகுதியினர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment