Ads (728x90)

கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிவரை நீடித்தது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றும் அபாயம் அதிகம் காணப்படுவதால் குறித்த மூன்று மாவட்டங்களும் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவினை நீடிக்கவும் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget