Ads (728x90)

உலகில் அதிக கொரோனா தொற்றாளர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ளது.

அமெரிக்காவின் – நியூயோர்க்கில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். அங்கு சுமார் 39,000 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நியூ ஜெர்ஸி, கலிபோர்னியா, வாஷிங்டன் பிராந்தியங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

சீனா மற்றும் இத்தாலியினை விடவும் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

85,600 க்கும் அதிகளவிலானோர் அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget