இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் மூவாயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

Post a Comment