Ads (728x90)

இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு எனவும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ஆம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாத பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ஆம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது .

அதனால் விழித்திருங்கள் - விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget