
புதிய ஏர்பாட்ஸ் எக்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஓவர் இயர் ஹெட்போனும் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
ஆப்பிள் ஓவர் இயர் ஹெட்போன்கள் B515மற்றும் ஏர்பாட்ஸ் எக்ஸ் B517 எனும் குறியீட்டு பெயர்களில் உருவாகி வருகிறது. இவற்றில் ஒரு மாடல் 2020 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஹெட்போன்களின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ஹெட்போன்கள் தவிர ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன் எஸ்இ 2020 மாடலை அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்இ 2020 விநியோகம் மே 1 ஆம் தேதி முதல் துவங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் பார்க்க ஐபோன் 7 அல்லது ஐபோன் 8 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் டச் ஐடி பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2016 மார்ச் மாதத்தில் ஐபோன் 5எஸ் மாடலில் புதிய அம்சங்களை சேர்த்து ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
Post a Comment