Ads (728x90)

அரிசிக்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக ஒரு கிலோகிராம்,

கீரி சம்பா - ரூபா 125
சம்பா - ரூபா 90
கீரி சம்பா - ரூபா 125
சம்பா வெள்ளை/ சிவப்பு -ரூபா 90
நாட்டரிசி - ரூபா 90
பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு -ரூபா 85

நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2003 இலக்கம் 09 எனும் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை சட்டத்தின் 20 (5) இன் கீழ், எந்தவொரு இறக்குமதியாளரோ, உற்பத்தியாளரோ, விநியோகஸ்தரோ, வர்த்தகரோ இவ்விலைகளை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Post a Comment

Recent News

Recent Posts Widget