Ads (728x90)

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

வெளிவந்த முடிவுகளின்படி அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோன வைரஸ் தொற்று என இனம்கானப்பட்டுள்ள மூவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாய்,மகன், மகள் ஆவர். இவர்கள் அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

ஏற்கனவே யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget